ஐபிஎல் தொடர் : டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி மும்பைக்கு திடீர் மாற்றம்; ஏனென்றால்..

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி, புனேவில் நடைபெற இருந்த நிலையில், மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.
டெல்லி அணியில் மிட்சல் மார்ஷ் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்த பின்பே வீரர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என பிசிசிஐ கூறியிருந்தது.
இந்நிலையில், தற்போது புனேவில் நடைபெற இருந்த போட்டியை மும்பை மைதானத்திற்கு மாற்றியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ, வீரர்கள் தங்கியிருக்கும் பகுதியில் கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற 4-வது சுற்று பரிசோதனையில் அனைவருக்கும் கொரோனா இல்லை என வந்துள்ளது. நாளை காலை மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.
இதில், கொரோனா இல்லை என உறுதி செய்தால் மட்டுமே டெல்லி கேப்பிடல்ஸ் அணி போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படும்' என பிசிசிஐ தெரிவித்துள்ளது.