ஐபிஎல் டுடே : குஜராத்தை தெறிக்கவிட்டு, இன்று சிஎஸ்கே 2-வது வெற்றி பெறுமா?
 

ipl25

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வெற்றி, 4 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9- வது இடத்தில் உள்ளது.

சென்னை அணி தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2- வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3- வது போட்டியில் பஞ்சாப் கிங்சிடம் 54 ரன் வித்தியாசத்திலும், 

4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் திடம் 8 விக்கெட்டிலும் தோற்றது. 5-வது ஆட்டத்தில் பெங்களூர் அணியை 23 ரன்னில் வென்றது.

ஷிவம் துபே-உத்தப்பா :
 
இந்நிலையில், சி.எஸ்.கே. அணி 6-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்சை இன்று சந்திக்கிறது. இந்தப் போட்டி புனேயில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

ஷிவம் துபே, உத்தப்பா ஆகியோரது அதிரடியான ஆட்டம் முதல் வெற்றிக்கு காரணமாக இருந்தது. இதே அதிரடி நீடிப்பது அவசியமானதாகும். ஆனால், பந்துவீச்சு இன்னும் பலவீனமாகவே இருக்கிறது. அதில் மேம்பாடு அடையவேண்டும். 

குஜராத்தை வீழ்த்த சி.எஸ்.கே. வீரர்கள் கடுமையாக போராட வேண்டும்.

முதலிடம் :

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றி , 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி சென்னையை தோற்கடித்து 5- வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 2 அரைசதத்துடன் 228 ரன் எடுத்து உள்ளார். 

இது தவிர ஷுப்மன் கில், டேவிட் மில்லர், தெவாட்டியா, பெர்குசன், முகமது போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

Share this story