ஐபிஎல் டுடே : டெல்லியை விரட்டி, சென்னை அணி மிரட்டலான வெற்றி : ரன்ஸ் விவரம்..
 

By 
csk4

ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. 

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்  பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சென்னை அணி முதலில் களமிறங்கியது.

208 ரன்கள் குவிப்பு :

தொடக்க வீரர்கள் டெவன் கான்வேயும் - ருதுராஜ் கெய்க்வாட்டும் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்திச் சிறப்பாக விளையாடினர்.

41 ரன்கள் எடுத்த நிலையில் நோர்ட்ஜெ பந்து வீச்சில் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். 

49 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த நிலையில், டெவான் கான்வே கலீல் அஹமத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். துபே 32 ரன்களும், கேப்டன் டோனி 8 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில், சென்னை அணி  6 விக்கெட் இழப்பிற்கு  208 ரன்கள் குவித்தது. 

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில், துவக்க வீரர் டேவிட் வார்னர் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 

மிட்சல் மார்ஷ் 25 ரன்னும், ரிஷப் பந்த் 21 ரன்னும், சர்துல் தாக்கூர் 24 ரன்னும் அடித்தனர். 

மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர். டெல்லி அணி 17.4 ஓவர் முடிவில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

91 ரன் வித்தியாசம் :

இதையடுத்து, சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி 3 விக்கெட்களும், முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங், பிராவோ தலா 2 விக்கெட்களும் எடுத்தனர்.
*

Share this story