ஐபிஎல் டுடே : ஐதராபாத் மிரட்டல் ; கொல்கத்தா மிரட்சி.. ஆட்ட நிலவரம்..

ஐபிஎல் போட்டி தொடரில், 25-வது லீக் ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஸ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ், ஆரோன் பின்ச் விரைவில் அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய சுனில் நரைன் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஸ்ரேயாஸ், நிதிஷ் ராணாவும் நிதானமாக ஆடினர். ஷ்ரேயாஸ் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், நிதிஷ் ராணா பொறுப்புடன் ஆடி, அரை சதமடித்தார்.
இறுதியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. ஆண்ட்ரூ ரசல் 49 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஐதராபாத் சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, களம் இறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 3 ரன்னுடன், கேப்டன் வில்லியம்சன் 17 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.
ராகுல் திரிபாதி 37 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். மார்க்கிராம் 36 பந்துகளில் 68 ரன்களை அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
ஐதராபாத் அணி 17.5 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
*