ஐபிஎல் டுடே மேட்ச் 2 : சென்னை-ஐதராபாத் மற்றும் பெங்களூரு-மும்பை மோதல்.. யாருக்கு வெற்றி?

ipl19

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்று இன்னும் புள்ளிகள் எதுவும் பெறாமல் உள்ளது.

சென்னை அணி தொடக்கப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் பஞ்சாப் கிங்சிடம் 54 ரன் வித்தியாசத்திலும் தோற்றது.

இன்றைய ஆட்டம் :

சி.எஸ்.கே. அணி 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று எதிர்கொள்கிறது. 

இந்தப் போட்டி மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு ஐதராபாத்தை தோற்கடித்து முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத் அணியும் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. அந்த அணி முதல் 2 ஆட்டங்களிலும் (ராஜஸ்தான், லக்னோ) தோற்று இருந்தது.

இரு அணிகளும் இதுவரை 16 போட்டியில் மோதியுள்ளன. இதில் சென்னை 12-ல், ஐதராபாத் 4-ல் வெற்றி பெற்றுள்ளன.

ரோகித் சர்மா - டுபெலிசிஸ் :

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆர்.சி.பி. 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி மும்பையை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. 

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் சென்னையை போலவே முதல் 3 ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. பெங்களூருவை தோற்கடித்து, முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story