ஐபிஎல் டுடே : சென்னையை வீழ்த்தி, ராஜஸ்தான் வெற்றி.. ஆடிய ஆட்டம் விவரம்..

By 
rr5

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பேட்டிங் தேர்வு செய்தார். 

டோனி 26 ரன் :

முதலில் பேட்ட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. தனி ஆளாகப் போராடிய மொயின் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் டோனி 26 ரன்கள் எடுத்தார். 

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹல், மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 2 ரன்னில் அவுட்டானார். கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்னிலும், படிக்கல் 3 ரன்னிலும், ஹெட்மயர் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அஸ்வின் அதிரடி :

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அரைசதமடித்தார். 

அவர் 59 ரன்னில் அவுட்டானார். கடைசிக் கட்டத்தில் அஸ்வின் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அஸ்வின் 40 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். 

Share this story