ஐபிஎல் டுடே : சென்னை அணிக்கு எதிராக, களம் இறங்குகிறார் சச்சி்ன் டெண்டுல்கரின் மகன்?

arjun

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்த தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று தரவரிசைப்பட்டியலில் 89 வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து 6வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 
மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜூன் டெண்டுல்கர் பந்துவீசி பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இதில், அர்ஜூன் டெண்டுல்கர் யார்க்கர் வீசி, மும்பையில் அதிக விலைமதிப்புள்ள வீரரான இஷான் கிஷானை கிளின் போல்ட் ஆக்குகிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சென்னைக்கு எதிரான போட்டியில், அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என கூறி வருகின்றனர்.

Share this story