ஐபிஎல் வைரல் : சர்ச்சைக்குரிய முறையில் மேத்யூ ஆட்டமிழப்பு..
 

By 
math

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நடைபெற்ற 67-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. 

அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது. 

அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் அதிரடியால் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதில், பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கோலி 73 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். 

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் வீரர் மேத்யூ வேட் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். 

மேக்ஸ்வெல் வீசிய 6-வது ஓவரின் போது மேத்யூ வேட்-க்கு எல்பிடபிள்யூ முறையில் கள நடுவர் அவுட் வழங்கினார். ஆனால், பந்து தனது மட்டையில் உரசியதாக செய்கை செய்த வேட் உடனடியாக டிஆர்எஸ் கோரினார். 

அப்போது பந்து தெளிவாக மட்டையில் பட்டு, திசை மாறி கீழே செல்வது தெரிந்தது. இருப்பினும் "அல்ட்ரா - எட்ஜ் "-யில் அதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. 

இதனால், 3-வது நடுவர் அவுட் வழங்க அது சர்ச்சையான முடிவாக மாறியது.
*

Share this story