ஐபிஎல் வெயில் : ரியான் பராக்-ஹர்சல் படேல் மோதல் ஏன்? : வைரல் சம்பவம்..

riyan

ஐபிஎல் கிரிக்கெட்டின் 39-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. 

இதில், ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின்போது, ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் மற்றும் பெங்களூர் அணி வீரர் ஹர்சல் படேல் ஆகியோர் மோதிக்கொண்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

56 ரன்கள் :

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் அதிகமாக எடுக்காத நிலையில், கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பராக் 56 ரன்கள் எடுத்து அணிக்கு கெளரவமான ஸ்கோரை எடுத்து கொடுத்தார். 

ஹர்சல் படேல் வீசிய கடைசி ஓவரில் பராக் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். 

ஓவர் முடிந்து, அனைத்து வீரர்களும் ஓய்வு அறைக்கு செல்லும் போதுதான் இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பெங்களூர் அணி களமிறங்கி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. 

சிரித்தபடியே கேட்ச் :

கடைசி விக்கெட்டான ஹர்சல் படேல் சிக்சர் அடிக்க முயன்றபோது, பராகிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் சிரித்தபடியே அந்த கேட்ச்சை பிடிப்பார்.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு அனைத்து வீரர்களும் கை கொடுப்பார்கள். 

அதன்படி பராக், கை கொடுக்க வரும்போது ஹர்சல் படேல் அவருக்கு கை கொடுக்காமல் சென்று விடுவார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
*

Share this story