ஐபிஎல் அதிரடி : கொல்கத்தாவை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது குஜராத்; ஆடுகள விவரம்..

ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று இரவு மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா- சகா ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். சகா 25 ரன்களும், அதிரடியாக ஆடிய பாண்ட்யா 69 ரன்களும் சேர்த்தனர்.
டேவிட் மில்லர் 27 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்தது.
தடுமாற்றம் :
இதையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, குஜராத் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் துவக்கத்திலேயே தடுமாறியது.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்த நிலையில், ரிங்கு சிங் 35 ரன்கள், ஆண்ட்ரே ரஸ்ஸல் 48 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தனர்.
எனினும், அந்த அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிறகு 148 ரன்களே சேர்க்க முடிந்தது.
இதனால், குஜராத் டைட்டன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலிடம் :
குஜராத் தரப்பில் முகமது ஷமி, ரஷித் கான், யாஷ் தயாள் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 12 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.