ஐபிஎல் அதிரடி : மும்பை முன்னேறியது-டெல்லி வெளியேறியது.. ஆடுகள விவரம்..

மும்பையில், நேற்று இரவு நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற மும்பை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.
ராவன் பவல் 43 ரன், கேப்டன் ரிஷப் பண்ட் 39 ரன், பிருத்வி ஷா 24 ரன்கள் எடுத்தனர்.
ரோகித் 2 ரன் :
மும்பை அணி சார்பில் பும்ரா 3 விக்கெட், ரமன்தீப் சிங் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்கியது.
கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பிரெவிஸ், இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார்.
பிரெவிஸ் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் இஷான் கிஷண் வெளியேறினார்.
4-வது விக்கெட்டுக்கு இணைந்த திலக் வர்மா, டிம் டேவிட் ஜோடி 52 ரன்கள் சேர்த்தது. டிம் டேவிட் 11 பந்தில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 34 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 21 ரன்னில் அவுட்டானார்.
பிளே ஆப் வாய்ப்பு :
இறுதியில், மும்பை அணி 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது மும்பை அணி பெறும் 4-வது வெற்றி ஆகும்.
மும்பைஅணி வெற்றி பெற்றதால், டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.
*