'ஐபிஎல்' இன்றே கடைசி : அடுத்த சீசனில் சந்திப்போம் என விராட்கோலி உருக்கம்

நடப்பு ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுடன் வெளியேறியது. பெங்களூரு, நடப்பு சீசனுக்கான ஐபிஎல் தொடர் இன்றுடன் முடிவடைகிறது.
அகமதாபாத்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் பெங்களூருவும் ஒன்று.
எட்டாத கனி :
அணியில் அதிரடி ஆட்டக்காரர்களுக்கு பஞ்சமே இல்லாத அந்த அணிக்கு, என்னவோ கோப்பையை வெல்வது மட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது.
இதனால், கடந்த சீசனுடன் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, நடைபெற்ற மெகா ஏலத்தில் அந்த அணி டூ பிளஸ்சிசை எடுத்ததுடன், அவரையே அணியின் கேப்டனாகவும் அறிவித்தது.
தொடக்கத்திலேயே சிறப்பாக விளையாடி வந்த அந்த அணி, இடையில் தடுமாடினாலும், இறுதியில் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துவிட்டது.
இறுதியில் தோல்வி :
வெளியேறுதல் சுற்றில் லக்னோ அணியை வீழ்த்திய பெங்களூரு அணி, ராஜஸ்தானுடன் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆட்டத்தில் தோல்வியடைந்து, வெளியேறியது. இதனால், அந்த அணியின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.
இதையடுத்து, அந்த அணியின் நட்சத்திர வீரரான கோலி டுவிட்டரில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது,
'சில நேரங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், சில சமயங்களில் வெற்றிபெற முடியாமல் போகிறது.
ஆனால், 12-வது மேன் ஆர்மி, நீங்கள் எப்போதும் எங்களை போட்டியின்போது முழுமையாக ஆதரித்தீர்கள்.
நீங்கள், கிரிக்கெட்டை சிறப்பாக ஆக்குகிறீர்கள். கற்றல் ஒருபோதும் நிற்காது.
நிர்வாகத்திற்கும், உதவி ஊழியர்களுக்கும் மற்றும் இந்த அற்புதமான உரிமையின் ஒரு பகுதியாக இருக்கும் அனைத்து நபர்களும் நன்றி.
அடுத்த சீசனில் சந்திப்போம்' என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
*