ஐபிஎல் போட்டி : சென்னையை வீழ்த்தி, குஜராத் வெற்றி.. ரன்ஸ் நிலை..
 

ipl43

ஐபிஎல் கிரிக்கெட்டின் 62-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. 

இதில், டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது.

ருதுராஜ் அசத்தல் :

தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ்-கான்வே களமிறங்கினர். கான்வே 5 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து வந்த மொய்ன் அலி 21 ரன்னில் அவுட் ஆனார். 

அடுத்து வந்த தமிழக வீரர் ஜெகதீஷன் ருதுராஜ் உடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
 
மிகவும் பொறுமையாக ஆடிய ருதுராஜ் 49 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து வந்த டூபே 0, டோனி 7, என்று அடுத்தடுத்து வெளியேறினார்.

இதனால், சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது.

67 ரன்கள் குவிப்பு :

குஜராத் அணி 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிறது.

இதில், அதிகபட்சமாக வ்ரித்திமான் சாஹா 57 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். தொடர்ந்து, மேத்யூவ் வாதே 20 ரன்களும், ஷூப்மான் கில் 18 ரன்களும், டேவிட் மில்லர் 15 ரன்களும், ஹார்திக் பாண்ட்யா 7 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில், குஜராத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
*

Share this story