ஐபிஎல் சீற்றம் : சிஎஸ்கே-ஐதராபாத் மோதலில், 'வருவோம்ல..' என டோனி ரசிகர்கள் செம கொண்டாட்டம்..

dhoni8

ஐபிஎல் தொடரில், நேற்று இரவு நடைபெற்ற 46-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

தரமான ஜோடி :

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. 

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் பந்து வீச்சாளர்கள் திணறினர். 
 
பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்ட இந்த ஜோடி, அணியின் ஸ்கோர் 182 என இருந்தபோது பிரிந்தது. 

சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். கான்வே ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் விளாசினார். கேப்டன் டோனி 8 ரன்களில் விக்கெட்டை பறி கொடுத்தார்.  

20 ஓவர் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது. 

முகேஷ் சவுத்ரி :

இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

அந்த அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா 39 ரன்னும், கேப்டன் வில்லிம்சன் 47 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். திரிபாதி டக்அவுட்டானார். மார்க்ராம் 17 ரன்னுடன் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய பூரன் ரன்களை குவித்தார்.  

ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6  விக்கெட் இழப்பிற்கு 189  ரன் அணிகள் அடித்தது. 

இதையடுத்து, சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சென்னை அணியின் முகேஷ் சௌத்ரி அதிக பட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில்,  டோனியின் புதிய தலைமையின் வழிகாட்டுதலே,  சிஎஸ்கேவுக்கு கிடைத்த ஆறுதல் என ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடுகின்றனர்.

Share this story