ஐபில் ரகளை : குஜராத்தை வென்று, நிமிர்ந்தது மும்பை.. த்ரிலிங்கான ஆட்ட விவரம்..

By 
mi1

ஐபிஎல் தொடரில், மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 

டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

டிம் டேவிட் அதிரடி :

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6  விக்கெட் இழப்பிற்கு 177  ரன்கள் எடுத்துள்ளது. இஷாந்த் கிஷன் 45 ரன், ரோகித் சர்மா 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 

கடைசிக் கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட்  21 பந்தில் 44 ரன் குவித்து களத்தில் இருந்தார்.
 
இதையடுத்து 178  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்கியது. 

சிறப்பு :

தொடக்க ஆட்டக்காரர்களான விருத்திமான் சஹா, ஷுப்மான் கில்லும் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தனர்.

அணியின் எண்ணிக்கை 106 ஆக இருக்கும்போது, ஷுப்மான் கில் 52 ரன்னில் அவுட்டானார். சிறிது நேரத்தில் சஹா 55 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி 24 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம், மும்பை 5 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இது மும்பை பெறும் 2-வது வெற்றியாகும். 

Share this story