ஐபிஎல் அமர்க்களம் : சென்னை அணிக்கு, டோனிக்கு பதில் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனமா ?

By 
ipl2023csk

சென்னை சூப்ப்ர் கிங்ஸ் அணிக்கு எம்.எஸ். மகேந்திர சிங் டோனிக்கு பதில் பென்ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனை நியூசிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2023 சீசனுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனின் பொறுப்பில் பென் ஸ்டோக்ஸிடம் ஒப்படைக்கலாம். டோனி ஒரு வீரராக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடைபெறும் முன், கேப்டன் பதவியை ஒப்படைக்க விரும்புவார்.பென் ஸ்டோக்ஸ் எதிர்காலத்தில் சென்னை சூப்ப்ர் கிங்ஸ்சை வழிநடத்த சிறந்த வேட்பாளராக இருப்பார் என்றும் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சிஎஸ்கே பிளே ஆப்களுக்குச் செல்லத் தவறியதால், 2023 இல் ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்புவேன் என்று எம்எஸ் டோனி உறுதிப்படுத்தினார். 4 முறை பட்டம் வென்று கொடுத்த டோனி ஓய்வு வதந்திகளை நிராகரித்து, ஐபிஎல் விளையாட நிச்சயமாக திரும்புவேன் என்று கூறினார்.

2019 க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்பியதன் மூலம், இந்தியா மற்றும் சென்னை முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக டோனி கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ காசி விஸ்வநாதன், எம்.எஸ்.டோனி ஐபிஎல் 2023 இல் சென்னையை தொடர்ந்து வழிநடத்துவார் என்று கூறி வருகிறார்.

ஐபிஎல் 2022 சீசனுக்கு ஒரு நாள் முன்னதாக தோனி கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐபிஎல்லின் முதல் பாதியில் சிஎஸ்கேயை ஜடேஜா வழிநடத்தினார்.இரண்டாவது பாதியில் கேப்டன் பொறுப்பை டோனியிடம் ஒப்படைத்தார் ஜடேஜா. ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நல்ல பார்மில் இருக்கிறார், அவர் தலைமையில் 10 டெஸ்டில் 9ல் வெற்றி பெற்றுள்ளது.

Share this story