நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் : பிரபல டென்னிஸ் வீராங்கனை பகிரங்க அறிவிப்பு

dariya

டென்னிஸ் தரவரிசை பட்டியலில், 12-வது இடத்தில் டாரியா கசட்கினா உள்ளார். 

25 வயதான டாரியா கடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியில் அரை இறுதிவரை சென்றார். 

இந்நிலையில், டாரியா கசட்கினா தாம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் ஓரின சேர்க்கைக்கு எதிராக கடந்த 2013-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. 

ஓரினச்சேர்க்கை இயற்கையை மீறிய உறவு இவை அனைத்துக்கும் தடை விதிக்க சட்டம் தற்போது இயற்றப்பட இருக்கிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவின் கால்பந்து வீராங்கனை நடியா, தாம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்தார். 

இதனை அடுத்து தற்போது டாரியா கசட்கினாவும் தாம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிவித்து, தனது காதலியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

இது குறித்து, அவர் கூறியதாவது ;

இதில் அமைதியை விரும்புங்கள். அது மட்டும் தான் முக்கியம். மற்றதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். 

சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பேசி அதற்கு ஆதரவளிக்கும் முக்கிய நபராக விளையாட்டுத்துறை வீரர்கள் விளங்குகிறார்கள்' என்றார்.

டாரியாவின் காதலி நட்டாளியா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கேப்டன் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story