பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது மகிழ்ச்சி : பிரதமர் மோடி வாழ்த்து

t20cricket

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடந்தது. இதில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதின.

முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 278 ரன்கள் குவித்தது. 279 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவரில் 157 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இதனால் 121 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2012, 2017, 2022 என 3 முறை பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான டி20 உலக கோப்பை போட்டியிலும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,

நமது விளையாட்டு வீரர்களால் இந்தியா பெருமை கொள்கிறது. பார்வையற்றோருக்கான டி20 உலக கோப்பையை இந்தியா வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியினருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Share this story