186 ரன்களில் ஆட்டமிழந்தது இந்தியா : வங்காளதேசம் அதிரடி பந்து வீச்சு விவரம்..

By 
vangalam

வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே வங்காள தேச வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

ஷேகர் தவான் 7 ரன்னுடன் வெளியேற கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்னுக்கு அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 9 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஷ்ரேயஸ் அய்யர் 24 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்னும் அடித்தார். தாக்குப் பிடித்து விளையாடிய கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார்.  இந்திய அணி 41.2 ஓவர் முடிவில் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்களை கைப்பற்றினார். ஹூசைன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்களாதேசம் அடுத்ததாக விளையாடுகிறது.

Share this story