இந்திய கிரிக்கெட் அணி : ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமனம்..

hardik pandya1

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டி20 போட்டி ஜனவரி 3-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரின்போது இடது கை விரலில் காயம் அடைந்தார். அவர் காயத்தில் இருந்து குணமடைய சில நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்து பிசிசிஐ அறிவித்துள்ளது.

டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் வருமாறு: ஹரதிக் பாண்ட்யா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷண், ருத்ராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார்.
 

Share this story