இந்திய கால்பந்து அணி ஜோதிடருக்கு சம்பளம் ரூ.16 லட்சம்..

afc

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்தியா சிறப்பாக ஆடி பிரதான ஆசியக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. 

இது, ஜோதிடர்களின் ஊக்குவித்ததுதான் இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. 

இதுதொடர்பாக, கால்பந்து அணியின் நிர்வாகி ஒருவர் பிடிஐ-செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 'ஆசியக் கோப்பை கால்பந்து அணிக்கு மோட்டிவேட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர்தான் தெரிந்தது அது ஜோதிட நிறுவனம் என்று' என தெரிவித்தார். 

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் இந்த மாத ஏஎஃப்சி ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக, முக்கிய சுற்றுக்கு வருவதை உறுதி செய்வதற்காக மூன்று மாத ஒப்பந்தம், ரூ. 16 லட்சம் சம்பளத்தில் தெற்கு டெல்லியில் இருந்து ஒரு ஜோதிட நிறுவனத்தை நியமித்தது. 

அகில இந்திய கால்பந்து சம்மேளன உயர் அதிகாரி ஒருவரிடம் ஜோதிட நிறுவனத்தில் ஈடுபடுவதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பியபோது இது வெளிச்சத்திற்கு வந்தது.
*

Share this story