இந்திய பெண்கள் அணியின் கேப்டன் வீட்டில் டிவி கூட இல்லை : பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்..

ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் அஸ்டம் (வயது 17). இவர் 17 வயதுக்கு உட்பட்டவர்க்கான இந்திய பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக உள்ளார். இவருடன் பிறந்தவர்கள் 5 பேர்.
இவரது பெற்றோர் தினமும் கூலி வேலை செய்தால் மட்டுமே சாப்பிட முடியும். தனது மகள் இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தாலும், இவர்கள் தினமும் கூலி வேலை செய்து வந்தனர். அஸ்டம் வசித்து வரும் ஊரில் யார் வீட்டிலும் டிவி இல்லை. அஸ்டம் இந்திய அணிக்காக விளையாடுவதை டிவியில் பார்க்க வேண்டும் என அவரது பெற்றோர் ஆசைப்பட்டனர்.
வீட்டில் டிவி வாங்குவதற்காக கூலி வேலை செய்து வரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து வந்தனர். அஸ்டமின் வீட்டில் டிவி இல்லை என்பது குறித்து ஒரு சில பத்திரிகைகளில் செய்தி வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அஸ்டமின் வீட்டிற்கு டி.வி, இன்வெர்ட்டர், டி.டி.எச் மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகளை செய்து தந்தனர்.
மேலும் அவரது ஊருக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால், சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அஸ்டம் ஊருக்கு தார்சாலை அமைக்கும் பணியில் அவரது பெற்றோரும் கலந்து கொண்டு தினக்கூலியாக வேலை செய்தனர்.