சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி : தங்கம் வென்றார் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர்
 

murali

12-வது சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி, கிரீஸ் நாட்டில் உள்ள கலிதியா நகரில் நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியில், இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் கலந்து கொண்டார். போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் அதிகபட்சமாக 8.31 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். 

இவருக்கு அடுத்து 2 வது இடத்தில் ஸ்வீடன்நாட்டின் தோபியாஸ் மாண்ட்லர் 8.27 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். 

அடுத்து 3-வது இடத்தில் 8.17 மீட்டர் தாண்டிய பிரான்ஸ் நாட்டின் ஜூல்ஸ் பொம்மெரி வெண்கலப் பதக்கம் வென்றார். 

சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில், தங்கம் வென்ற இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன .
*

Share this story