டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு என்பது உண்மையா? : செரீனா விளக்கம்

serena1

முன்னாள் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தான் தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த யுஎஸ் ஓபனுக்குப் பிறகு, செரீனாவை மீண்டும் டென்னிஸ் மைதானத்தில் காண முடியாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விரைவில் டென்னிஸ் கோர்ட்டிற்குத் திரும்பப் போவதாக திடீர் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

செரீனா வில்லியம்ஸ் சான்பிரான்சிஸ்கோவில் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறுகையில், ​​'நான் ஓய்வு பெறவில்லை. நான் திரும்புவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். நீங்கள் என் வீட்டிற்கு வரலாம். எனது வீட்டில் டென்னிஸ் மைதானம் உள்ளது.

என் வாழ்க்கையில் முதல்முறையாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இது மிகவும் விசித்திரமாகத் தெரிகிறது, ஆனால் நான் இப்போது வரை ஓய்வு பற்றி எதுவும் நினைக்கவில்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

Share this story