என் வாழ்க்கையை மாற்றியது சுரேஷ் ரெய்னாதான் : கார்த்திக் தியாகி பெருமிதம்

suresh

ஐபிஎல் 15-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் கார்த்திக் தியாகி, தன் வாழ்க்கையை மாற்றியது சுரேஷ் ரெய்னா தான் என தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா குறித்து கார்த்திக் கூறியதாவது :

நான் முதலில் 14 வயதுக்குட்பட்ட அணிக்காகவும், பின்னர் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்காகவும் விளையாட ஆரம்பித்தேன். 

ஒருமுறை 16 வயதுக்கு உட்பட்டோருக்கான 7 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்தேன். 

அப்போது, பயிற்சியின் போது எனது பந்துவீச்சை கவனித்த ரெய்னா, என் பந்து வீச்சு மிகவும் பிடித்ததாக கூறினார். 

மேலும், எதிர்காலத்தில் எனக்கு  வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார். 

ரெய்னா எனது வாழ்க்கையில் ஒரு கடவுளாக வந்தார். 

அவரது தலைமையின் கீழ், நான் ரஞ்சி டிராபிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மக்கள் என்னை அடையாளம் காணத் தொடங்கினர். அது எனது வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும்' என்றார்.

Share this story