விராட்கோலியின் ஆட்டத்திறன் குறித்து, ஜெயவர்த்தனே சொன்ன கருத்து..

jayawar

விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்று இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் கூறியதாவது :

விராட் கோலி தற்போது எதிர்கொண்டு வரும் சூழல் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனால், அவர் தரமான ஆட்டக்காரர். 

அவர் மோசமான நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான திறமைகளை பெற்றவர். கடந்த காலங்களில், அவர் இது மாதிரியான சூழ்நிலையை கடந்து வந்துள்ளார். 

அதேபோல, விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

கிரிக்கெட்டில் பேட்டிங் நுணக்கம் என்பது தான் நிரந்தரம். பார்ம் வெறும் தற்காலிகமான ஒன்று தான். 

இவ்வாறு ஜெயவர்த்தனே கூறியுள்ளார். 

விராட் கோலி சர்வதேச போட்டியில் மொத்தம் 23, 726 ரன்கள் (டெஸ்ட் 8074, ஒரு நாள் ஆட்டம் 12,344, 20 ஓவர் போட்டி 3308) எடுத்துள்ளார். 

70 சதங்களை (டெஸ்ட் 27+ ஒருநாள் போட்டி 43) அடித்துள்ளார்.
*

Share this story