பிரபல நடிகையுடன் கே.எல்.ராகுல் திருமண விழா..

klrahul3

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் லோகேஷ் ராகுல். இவர் இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை காதலித்து வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ராகுல் ஆடவில்லை. சொந்த காரணங்களுக்காக அவர் விலகி இருந்தார். இந்த நிலையில் கே.எல்.ராகுல் நாளை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் திருமணம் குறித்த தகவல்கள் மும்பை ஊடகங்களில் வெளியாகி உள்ளன. கே.எல்.ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் நாளை நடக்கிறது.

இதற்கான மெஹந்தி விழா மும்பையில் உள்ள அதியா ஷெட்டியின் வீட்டில் இன்று நடந்தது. மலைவாசஸ்தலமான மகாராஷ்டிர மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் லோகேஷ் ராகுல்-அதியா ஷெட்டி திருமணம் நடக்கிறது.

இரு தரப்பில் இருந்தும் தலா 100 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள். மேலும் திருமணத்தில் பங்கேற்பவர்கள் யாரும் புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சல்மான்கான், அக்ஷய்குமார், கிரிக்கெட் வீரர்கள் டோனி, விராட் கோலி ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு பாலிவுட், கிரிக்கெட் நட்சத்திரங்களுக்காக மும்பையில் பெரிய அளவில் திருமண வரவேற்பை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ராகுல் திருமணம் செய்ய இருக்கும் அதியா ஷெட்டி 2015 முதல் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். 4 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

Share this story