நடிகை அதியா ஷெட்டியுடன் கே.எல்.ராகுல் : வைரலாகிறது இன்டா பதிவு..

athiya

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக விளங்குபவர் கேஎல் ராகுல். தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இவருடன், ஹிந்தி நடிகையான அதியா ஷெட்டியுடன் இணைத்து பல வதந்திகள் வந்த நிலையில், அதியா ஷெட்டியும் கே.எல்.ராகுலும் தங்களுடைய உறவைப் பற்றி வெளிப்படையாகக் கூறினர். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். 

இந்நிலையில் அதியா ஷெட்டியும் கேஎல் ராகுலும் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டிராகிராமில் அதியா ஷெட்டி பதிவு செய்தார். மிகவும் பிடித்தமான ஒன்று என அதில் குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக கேஎல் ராகுல் இதய எமோஜியை பதிவிட்டார். 

இந்த புகைப்படத்தை லைக் செய்து கிரிக்கெட் வீரர்களும் சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கிரிக்கெட் வீரரான குர்ணால் பாண்ட்யா, நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் அன்பை வெளிப்படுத்தும் இதய எமோஜிக்களை வெளியிட்டுள்ளனர். 

இந்த புகைப்படத்திற்கு கிட்டத்தட்ட 4 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன

Share this story