கும்பகோணம் அருகே, மைதானத்தில் சுருண்டு விழுந்து கபடி வீரர் உயிரிழப்பு..
Mon, 26 Sep 2022

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோயில் பகுதியில் கபடிப் போடி நடைபெற்றது.
இதில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கபடி அணிகள் பங்கேற்றன. போட்டி முடிந்த சற்று நேரத்தில் நன்னிலத்தை சேர்ந்த கபடி வீரர் செந்திலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதைப் பார்த்த சக வீரர்கள அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக செந்திலுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கபடி போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ள கபடி வீரர் செந்திலின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.