கிரிக்கெட் ராஜ்ஜியம் : முதல் வெற்றியை பறிக்கப் போவது, இங்கிலாந்தா? தென்ஆப்பிரிக்காவா?

ball

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 

இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 

முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 62 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து 118 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. 

3-வது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. அடுத்து இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடர் நடக்கிறது. 

இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்டல் மைதானத்தில் நாளை (27-ந் தேதி) நடக்கிறது. 

வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இரு அணிகளும் உள்ளன. 

இதனால், ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*

Share this story