இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுகிறேன் : கே.எல்.ராகுல்

rahul44

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 

இத்தொடருக்கான இந்திய அணியில் மூத்த வீரர்கள் இடம்பெறவில்லை. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 

20-ந்தேதி :

மூத்த வீரர்கள் அடங்கிய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க, இங்கிலாந்து புறப்பட்டுச் செல்ல உள்ளது. ராகுல் திராவிட், ஸ்ரேயாஸ்  உட்பட இரண்டாவது இந்திய அணிக் குழு வரும் 20ஆம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது. அங்கு சென்ற பிறகு 24ஆம் தேதி, கவுண்டி அணிக்கு எதிராக இந்தியா டெஸ்ட் விளையாட உள்ளது. 

அடுத்து ஜூலை 1 முதல் 5ஆம் தேதிவரை, இங்கிலாந்தை எதிர்த்து, 2021 ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. 

முன்னதாக, கடந்த ஆண்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கொரோனா காரணமாக ஒரு போட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய கே.எல். ராகுல் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

பிசிசிஐ வட்டார தகவல் :

'கேஎல் ராகுல் இன்னும் காயத்திலிருந்து மீளவில்லை. 

டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் மும்பையில் கூடுகின்றனர். நள்ளிரவில் இங்கிலாந்து புறப்படுகின்றனர். 

கே.எல்.ராகுல் அந்த அணியுடன் பயணிக்கவில்லை. இந்த வார இறுதியில் உடற்தகுதித் தேர்வில் ராகுல் பங்கேற்க உள்ளார். 

எனினும், காயத்திலிருந்து மீள அவர் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ள உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
*

Share this story