இன்ஸ்டா முகப்புப் படத்தை மாற்றினார் எம்.எஸ்.டோனி

By 
dhonims

இன்று முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள், தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.

மேலும் தனது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தில், தேசிய கொடியை உடனே அவர் பதிவேற்றம் செய்தார்.

இதையடுத்து மத்திய மந்திரிகள், பா.ஜ.க. உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகப்பு படத்தை மாற்றியுள்ளார் .அதன்படி தேசியக்கொடியை முகப்பு படமாக அவர் மாற்றியுள்ளார்.

டோனி சமுக வலைதளத்தில் அதிகம் ஆக்டிவாக இருக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story