டோனியின் நினைவுகளில் நான் : விராட்கோலி உருக்கம்

dhonivirat

* அபாரமாக விளையாடும் வீரர்களை கவுவரவிக்கும் வகையில் மாதம் தோறும் சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கி ஐசிசி பெருமைபடுத்தி வருகிறது.

அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஐசிசி அறிவித்துள்ளது. சமீபகாலமாக சூப்பர் பார்முக்கு திரும்பியிருக்கும் விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

* தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடிய விராட் கோலி, டோனி குறித்து பல்வேறு விஷயங்களை மனம் திறந்துள்ளார். விராட் கோலி, நீங்கள் வலுவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நேரங்களில் தனிப்பட்ட அளவில் வலுவாக உள்ளது போல தோற்றம் கொடுத்துவிட்டால், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க மறந்து விடுவார்கள் என டோனி தனக்கு மேசேஜ் அனுப்பியது என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என விராட் கோலி கூறினார்.

மேலும் டோனி உடனான உறவு எனக்கு கிடைத்த வரம் என்றும் என் மீது உண்மையான அக்கறையுடன் என்னை அனுகுபவர் டோனி மட்டுமே, நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பும் மரியாதையும் மிகச் சிறந்தது என டோனி குறித்து விராட் கோலி மனம் திறந்து உருக்கமாக பேசியுள்ளார்.

 

Share this story