மிகப்பெரிய வாய்ப்பை இழந்துவிட்டேன் : நீரஜ் சோப்ரா வருத்தம்

By 
neeraj6

உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். 

இந்நிலையில், வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியின் போது காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

ஆகவே, அவர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்தார்.

காஞ்சீபுரத்தில் மாநில வாள்வீச்சு போட்டி ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்ற செய்தி விளையாட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், நீரஜ் ஜோப்ரா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், எனது பட்டத்தை தக்க வைக்க முடியாமல் போனதும், நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை இழந்தததும் வருத்தம் அளிக்கிறது. 

இன்னும் சில தினங்களில் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் தேசிய கோடியை ஏந்தி அணியை வழிநடத்தும் வாய்ப்பை நினைத்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், தேசிய கோடியை ஏந்தி அணியை வழிநடத்தும் வாய்ப்பை இழந்ததை எண்ணி மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். 

இன்னும் சில தினங்களில் காயங்களில் இருந்து விடுபட்டு விரைவில் களத்திற்கு வருவேன் என்று நம்புகிறேன். 

கடந்த சில நாட்களாக நான் பெற்ற அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் முழு நாட்டிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 

மேலும் வரும் வாரங்களில் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த என்னுடன் சேர உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த். என்று கூறியுள்ளார.
*

Share this story