அதிக அரைசதங்கள் : டேவிட் வார்னர் புதிய சாதனை..

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், மும்பையில் நடந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஐதராபாத் பீல்டிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்செய்த டெல்லி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது.
டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 92 ரன்களுடனும், பாவெல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
அடுத்து ஆடிய ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்களே எடுத்தது. இதனால், டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்கள் எடுத்தார். மார்கிராம் 25 பந்தில் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், நேற்றைய போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னர் 89-வது அரை சதம் கடந்தார்.
இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்தவர் என்ற புதிய சாதனை படைத்தார்.
இவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெயில் 88 அரை சதம், விராட் கோலி 77 அரை சதம் அடித்துள்ளனர்