எனது கனவு தகர்ந்தது : இந்திய டென்னிஸ் வீரர் போபண்ணா ஃபீல்..

french1

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர், பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின், அரையிறுதி ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)- மாட்வே மிடெல்கூப் (டச்சு) ஜோடி, ஜியான் ஜூலியன் ரோஜர்-மார்செலோ அரேவாலா இணையை எதிர்கொண்டனர் . 

இந்த ஆட்டத்தில் 6-4 என்று முதல் செட்டை போபண்ணா ஜோடி கைப்பற்றிய போதிலும், இறுதியில் 6-4, 3-6, 6-7 (8-10) என்ற செட் கணக்கில் ரோகன் போபண்ணா ஜோடி போராடி தோற்றது. 

இதன்மூலம், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இறுதி ஆட்டத்துக்கு, முதன்முறையாக தகுதி பெற வேண்டுமென்ற 42 வயதான போபண்ணாவின் கனவு தகர்ந்தது.
*

Share this story