டென்னிஸ் இறுதிப்போட்டியில் நடால் - கேஸ்பர் ரூட் கர்ஜனை: இன்று பட்டம் வெல்வது நீயா? நானா?

nadal

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி, பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில், நார்வேயை சேர்ந்த ஒருவர் கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். அந்த பெருமையை கேஸ்பர் ரூட் பெற்றார்.

இன்று மாலை 6.30 :

இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ரபெல் நடால்-கேஸ்பர் ரூட் மோதுகிறார்கள்.

களிமண் தரையான பிரெஞ்சு ஓபன் போட்டியில் விளையாடுவதில் நடால் வல்லவர். அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 13 முறை வென்று சாதனை படைத்துள்ளார். 

அவர் 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தார். 

அவர், பிரெஞ்சு ஓபன் போட்டியில் 2009-ல் 4-வது சுற்றிலும், 2015-ல் கால் இறுதியிலும், 2016-ல் 3-வது ரவுண்டிலும், 2021-ல் அரை இறுதியிலும் தோற்று இருந்தார்.

22-வது பட்டம்? :

36 வயதான நடால் ஒட்டுமொத்தமாக 21 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று (ஆஸ்திரேலிய ஓபன் 2, பிரெஞ்சு ஓபன் 13, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 4) முதல் இடத்தில் இருக்கிறார்.

அவருக்கு அடுத்தபடியாக பெடரர் (சுவிட்சர்லாந்து), ஜோகோவிச் (செர்பியா) தலா 20 கிராண்ட்சிலாம் பட்டங்களுடன் 2-வது இடத்தில் உள்ளனர். 

நடால் ஒட்டுமொத்தமாக 22-வது பட்டத்தையும், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 14-வது முறையாகவும் இன்று வெல்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
*

Share this story