தேசிய விளையாட்டு போட்டி : தமிழக அணிக்கு மேலும் பல பதக்கங்கள்..

By 
tnt

36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியில் தமிழக அணி 5 பதக்கங்களை வென்றது.

ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்த போட்டியில் பஞ்சாப்பை 97-89 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு வீழ்த்தியது.

கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவின் இறுதி சுற்றில் தமிழகம் 62-67 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவிடம் தோற்றது. இதன் மூலம் தமிழக அணி வெள்ளி பதக்கம் வென்றது.

பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் ரூபன் குமார்-ஹரிகரன் ஜோடி வெள்ளி பதக்கம் வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் ஹரிகரன்-நர்த்தனா ஜோடி வெண்கலம் வென்றது.

போட்டி முடிவில் தமிழக அணி 19 தங்கம், 20 வெள்ளி, 19 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

Share this story