தேசிய விளையாட்டு போட்டி இன்றே கடைசி : தமிழக அணி பெற்ற பதக்கங்கள்; இடம் விவரம்..

By 
ng

36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் தமிழக அணிக்கு ஒரு தங்கம் உள்பட 3 பதக்கம் கிடைத்தது.

டிரையத்லான் பந்தயத்தில் தங்கப்பதக்கம் கிடைத்தது. ஆகாஷ், பெருமாள்சாமி, வாமன், ஆர்த்தி, கீர்த்தி ஆகியோர் அடங்கிய அணி கலப்பு தொடரில் 1 மணி 59 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதல் இடத்தை பிடித்தது.

யோகாசான போட்டியில் பெண்களுக்கான ஆர்டிஸ்டிக் அணிகள் பிரிவில் நிவேதா, கீத்திகா, வைஷ்ணவி, ரோகிணி, காயத்ரி ஆகியோர் கொண்ட தமிழக அணி வெண்கல பதக்கம் பெற்றது.

இதே போல யோகானம் ரித்மிக் ஜோடி பிரிவில் நிவேதா-அபிராமி ஜோடி வெண்கல பதக்கம் பெற்றது. கடந்த 29-ந்தேதி தொடங்கிய தேசிய விளையாட்டு போட்டி இன்று முடிவடைகிறது. நேற்றைய போட்டியின் முடிவில் தமிழக அணி 25 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலம் ஆக மொத்தம் 73 பதக்கம் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. சர்வீசஸ் 56 தங்கம், 34 வெள்ளி, 31 வெண்கலம் ஆக மொத்தம் 121 பதக்கத் துடன் முதல் இடத்தில் உள்ளது.

மராட்டியம் 38 தங்கம் உள்பட 138 பதக்கத்துடன் 2-வது இடத்திலும், அரியானா 34 தங்கம் உள்பட 106 பதக்கத்துடன் 3-வது இடத்திலும், கர்நாடகா 27 தங்கம் உள்பட 88 பதக்கத்துடன் 4-வது இடத்திலும் உள்ளன.

Share this story