யாருமே இங்கு நிரந்தரமானவர்கள் கிடையாது :  கே.எல். ராகுலுக்கு, காம்பீர் அறிவுரை
 

By 
gautam

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் மட்டும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன. இதஇந்தியா ற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் டி20 அணி தனியாகவும், ரோகித் சர்மா தலைமையில் 50 ஓவர் கிரிக்கெட்டிற்கான ஒரு அணியும் உருவாக்கப்பட்டுள்ளன. உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த விஷயம் கே.எல்.ராகுல் மீது நடவடிக்கை எடுத்திருப்பது தான்.

தொடர்ச்சியாக சொதப்பி வரும் கே.எல்.ராகுல் சமீபத்தில் நடந்த வங்கதேச டெஸ்ட் தொடரிலும் 22, 23, 10, 2 என மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவர் இந்தியாவின் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் கே.எல்.ராகுலிடம் இருந்த துணைக்கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டு, ஹர்திக்கிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கே.எல்.ராகுலுடன் லக்னோ அணியில் பணிபுரியும் கவுதம் காம்பீர் அறிவுரை கூறியுள்ளார்.

'நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். தேர்வுக்குழுவை கட்டுப்படுத்த முடியாது. அடுத்த தொடரில் என்ன நடக்கும் என்பதை முடிவு செய்ய முடியாது. எனவே இந்த முறை 3 ஒருநாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி விளையாட வேண்டும்.

நம்மால் மாற்ற முடியாத விஷயத்தை நினைத்து நம்மை நாமே அழுத்தத்தில் போட்டுக்கொள்ள கூடாது. நீங்கள் சரியாக ஆடவில்லை என்றால் வேறு ஒருவர் வரத்தான் செய்வார். கே.எல்.ராகுலுக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கும் இதே விதிமுறைதான்.

அவர்கள் குறித்தும் நீங்கள் கேள்வி எழுப்பலாம். யாருமே இங்கு நிரந்தரமானவர்கள் கிடையாது. சிறப்பாக விளையாடி இடத்தை தக்கவையுங்கள். இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்.
 

Share this story