நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை ஸ்வியாடெக்கின் வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்தது..
 

swia

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. 

இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், பிரான்ஸ் வீராங்கனையான அலிஸ் கார்னெட்டுடன் மோதினார். 

இதில், 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அலிஸ் கார்னெட் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். 

இந்த தோல்வியின் மூலம் சர்வதேச டென்னிசில் 37 வெற்றிகள் பெற்ற ஸ்வியாடெக்கின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.

37 முறை தொடர் வெற்றி பெற்ற ஸ்வியாடெக்கை டென்னிஸ் ஆர்வலர்கள் பாரட்டி வருகின்றனர்.
*

Share this story