எங்களது திட்டம் வெற்றி பெறும் : கேப்டன் ஸ்ரேயாஸ் நம்பிக்கை
 

shri

ஐபிஎல் போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

இந்த வெற்றி குறித்து, கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் கூறியதாவது :

'தற்போதைய சூழலில் தமது அணி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் உள்ளது.
 
இந்த போட்டியில் தமது வீரர்கள் பயமின்றி விளையாடினர். அனைவரும் சரியாக செயல்பட்டனர். 

எனினும், தமது அணி முழு திறனுடன் இன்னும் விளையாடவில்லை,  அது குறித்து ஆட்டத்திற்கு முன்னர் சக வீரர்களிடம் பேசினோம்.

ஆண்ட்ரே ரசல் அதிக ரன் எடுக்க வேண்டும் என்பதால், அவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, சக வீரர் முடிந்தவரை அவருக்கு பேட்டிங் வாய்ப்பை கொடுப்பதே எங்களது திட்டமாக இருந்தது.

கடைசி ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீச இருப்பதை தெரிந்து, அவரை குறி வைத்தோம். அது சிறப்பாக வேலை செய்தது. 

இறுதி ஆட்டத்திலும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படும்' என்றார்.
*

Share this story