பதக்கம் வென்ற இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து

rani2

காமன்வெல்த் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை பிந்த்யாராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

'பர்மிங்காமில் காமல்வெல்த் போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, பிந்த்யாராணி தேவிக்கு வாழ்த்துகள். 

இந்த சாதனை அவரது விடாமுயற்சியின் வெளிப்பாடாகும்.

மேலும் இது ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதேபோல், 55 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சங்கேத் சர்காருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவரது அபாரமான முயற்சியால் மதிப்புமிக்க வெள்ளியை வெல்வது காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். 

அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். 

இதேபோல் 61 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் பி. குருராஜாவிற்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவரது விளையாட்டுப் பயணத்தில் மேலும் பல மைல்கல் சாதனைகள் படைக்க வாழ்த்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
*

Share this story