டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் விமர்சனம்..
 

vicket

யார் சிறந்த விக்கெட் கீப்பர்? என்ற கேள்விக்கு பதிலத்த லத்தீஃப் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர்-பேட்டரான டிகாக்கை குறிப்பிட்டார். 

இது குறித்து, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் லத்தீஃப் கூறியதாவது :

டோனி விளையாடிய காலங்களில் 21 சதவீதம் கேட்சுகளை தவறவிட்டார். இது பெரிய எண்ணிக்கையாகும். 

டோனி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 256 கேட்சுகள் மற்றும் 38 ஸ்டம்பிங், ஒருநாள் போட்டிகளில் 321 கேட்சுகள் மற்றும் 123 ஸ்டம்பிங் மற்றும் டி20 போட்டிகளில் 57 கேட்சுகள் மற்றும் 34 ஸ்டம்பிங்குகளை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும், ஒரு விக்கெட் கீப்பர் தவறவிட்ட வாய்ப்புகள் குறித்தும் ஒருவர் கவனம் செலுத்த வேண்டும். டோனி ஒரு பெரிய பெயர். 

ஆனால், நான் புள்ளிவிவரங்களுடன் கூறினால், அவரது (கேட்ச்) தவறவிட்டது 21 சதவீதமாகும். எல்லோரும் கேட்ச் பிடித்த பட்டியலை பார்க்கிறார்கள். 

ஆனால், கைவிடப்பட்ட கேட்சுகளின் எண்ணிக்கை, தவறவிட்ட ஸ்டெம்பிங்கின் எண்ணிக்கை, தவறவிட்ட ரன்-அவுட்களை யாரும் கவனிப்பதில்லை. கடந்த 15 ஆண்டுகளில் குயின்டன் டி காக் சிறந்தவர். 

அவர் மூன்று வடிவங்களிலும் கீப்பிங் மற்றும் நன்றாக பேட்டிங் செய்தார். அவர் ஒரு சிறந்த பினிஷராக இல்லை. 

ஆனால், ஒரு சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன். அவருக்கு முன் மார்க் பவுச்சர் மற்றும் குமார் சங்கக்காரா சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தனர்' என்றார்.
*

Share this story