போலீசாருக்கான கிரிக்கெட் போட்டி : முதலிடம் பெற்ற அணி எது தெரியுமா? 

puliyampatti

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டியில், போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் போலீசாருக்கு இடையே நட்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மணியாச்சி போலீஸ் நிலைய உட்கோட்ட அளவில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் ஓட்டப்பிடாரம் ரெட் புல்ஸ் அணி, புளியம்பட்டி புனித அந்தோனியார் லெவென்ஸ் அணி, ஒயிட் ஆர்.மி கேம்ப் ஆபிஸ் அணி, கடம்பூர்-பசுவந்தனை போலீஸ் அணி ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன.

இதில் லீக் சுற்றுகளின் அடிப்படையில் நடந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் கடம்பூர் பசுவந்தனை- காவலர் அணியும் புளியம்பட்டி புனித அந்தோனியார் லெவென்ஸ் அணியும் மோதின.

இதில் முதலில் விளையாடிய பசுவந்தனை-கடம்பூர் போலீஸ் அணியினர் 102 ரன்கள் எடுத்தனர். புனித அந்தோணியார் லெவென்ஸ் அணியினர் 17 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 103 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற புளியம்பட்டி அணிக்கு மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
 

Share this story