தங்கம் வென்ற  அச்சிந்தாவுக்கு, ஜனாதிபதி-பிரதமர் வாழ்த்து : மக்கள் வெற்றிக்கொண்டாட்டம்..

By 
common2

காமன்வெல்த் போட்டி பளு தூக்குதலில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். 

ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கிய அவர், இந்தியாவிற்கு 3-வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். 

இந்நிலையில், அச்சிந்தா ஷூலி இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று மூவர்ணக் கொடியை உயரப் பறக்க வைத்தார். 

ஒரே முயற்சியில் முதலிடத்தை பிடித்த நீங்கள் தான் வரலாறு படைத்த சாம்பியன்' என்றும் கூறியுள்ளார். 

இதேபோல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 

'காமன்வெல்த் விளையாட்டுகளில் திறமை மிகுந்தக அச்சிந்தா தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அமைதியான இயல்பு மற்றும் மனஉறுதிக்கு அவர் பெயர் பெற்றவர், தனது சிறப்பு சாதனைக்காக அவர் மிகவும் கடுமையாக உழைத்தார்.

அவரது எதிர்கால முயற்சிகளுக்காக எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்காளம், ஹவுரா மாவட்டத்தில் அமைந்துள்ள அச்சிந்தாவின் கிராமத்து மக்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
*

Share this story