பி.வி.சிந்துவுக்கு, பிரதமர் மோடி- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

sindhu4

'சுவிஸ் ஓப்பன் 300 இறகுப்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில்  வென்ற பி.வி.சிந்து மீண்டும் ஒருமுறை இந்தியர்களை பெருமை கொள்ளச் செய்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

ஊக்கம் :

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 'சுவிஸ் ஓபன் 2022-ல் வெற்றி பெற்றமைக்காக சிந்துவுக்கு என்னுடைய வாழ்த்துகள். 

அவரது வெற்றிகள் இந்தியாவின் இளைய சமூகத்தினருக்கு ஊக்கம் ஏற்படுத்தும். வருங்காலத்திலும் அவரது முயற்சிகளுக்காக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

உந்து விசை :

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது :

தனது ஆதிக்கம் மிகுந்த அபார ஆட்டத்தால், சுவிஸ் ஓப்பன் 300 இறகுப் பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று, நம் அனைவரையும் பி.வி.சிந்து மீண்டும் ஒருமுறை பெருமை கொள்ளச் செய்துள்ளார். 

இது இப்பருவத்தில் ஒற்றையர் பிரிவில் அவர் கைப்பற்றியுள்ள இரண்டாவது தொடராகும். 

அவர், மென்மேலும் வெற்றிகளைக் குவித்து நமது இளைஞர்களுக்கு உந்து விசையாக விளங்க எனது வாழ்த்துகள்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share this story