டெப்லிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற வீரர்களுடன், பிரதமர் மோடி கலந்துரையாடல்

பிரேசில் நாட்டின் காக்சியாஸ் டோ சுல் நகரில், மே 1ஆம் தேதி தொடங்கிய, காது கேளாதோர் டெப்லிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்றன.
மே 15ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டிகளில்
72 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,100 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியா சார்பில் 65 தடகள வீரர்களைக் கொண்ட அணி இந்த போட்டிகளில் பங்கேற்றது.
மொத்தம் 11 போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி 8 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 7 வெண்கலம் உட்பட 16 பதக்கங்களை வென்றது.
இந்நிலையில், டெப்லிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர்.
நமது வீரர்கள் தங்களது விளையாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாகவும், இந்த முறை டெப்லிக்ம்ஸ் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதாகவும் பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
அனைவருக்கும் தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
*