புரோ கபடி லீக் : டெல்லி அணியை வீழ்த்தி புனே வெற்றி; ஆடுகள விவரம்..

proka

* 12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நடைபெற்ற போட்டியில் தபாங் டெல்லி - புனேரி பல்டன் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.

கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடிய புனே அணி 47- 44 என்ற கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

* எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்.) சார்பில் 2022-ம் ஆண்டுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டிகள் கடந்த நவம்பர் 28-ந்தேதி தொடங்கியது.

இந்த போட்டிகள் வருகிற 4-ந்தேதி வரை நடைபெறுகின்றன. இதில், இந்தியா சார்பில் இளம் வீரர் ருத்ரான்கிஷ பாட்டீல் (வயது 18) 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் கலந்து கொண்டார். 

அவர், இத்தாலி நாட்டை சேர்ந்த டேனிலோ சொல்லாஜோ என்பவரை 16-8 என்ற புள்ளி கணக்கில் பிளே-ஆப் சுற்றில் வீழ்த்தி பிரெசிடென்ட் கோப்பையை தட்டி சென்றுள்ளார். அவருக்கு இந்திய விளையாட்டு கழகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

 

Share this story