புரோ கபடி போட்டி : 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஜெய்ப்பூர் அணி; ஆடுகள விவரம்..

By 
jaipur1

* 9-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சுனில் குமார் தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.

இருப்பினும், கடைசி நேரத்தில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி இறுதியில் 33- 29 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் 2வது முறையாக புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

* அஸ்வின் குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில்:- ரவிச்சந்திரன் அஸ்வின் டெய்லண்டர் அல்ல. அவர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ரன்கள் விளாசியுள்ளார். அஸ்வின் போல் கீழ்நிலையில் உள்ள வீரர்கள் ரன்கள் சேர்க்கும் போது எதிரணியினருக்கு கோபத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தும். பேட்டிங்கில் உழைக்கக் கூடியவர். அதனை அஸ்வின் மிகச்சிறப்பாக செய்து வருகிறார்.

இளம் வயதிலேயே ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் ஏராளமான கடினமான சூழல்களில் ரன்கள் சேர்த்துள்ளார்.பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி எதிரணி வீரர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருப்பார். இப்போதும் சென்னையில் இருந்தால் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார்.

என்னை பொறுத்தவரை, அஸ்வின் ஒரு கிரிக்கெட் விஞ்ஞானி. ஏனென்றால், ஒவ்வொரு முறையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் புதிதாக ஒன்றை கண்டுபிடித்து கொண்டே இருப்பார். புதிய முயற்சிகளை மேற்கொள்வார். இவ்வாறு கார்த்திக் கூறினார்.
 

Share this story